Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Tuesday, January 12, 2021

பழங்கால சிலைகள் படத் தொகுப்பு

நீங்கள் நம்பமுடியாததாக நினைக்கும் படி சில பழங்கால சிலைகள் படத் தொகுப்பைப் பாருங்கள்!

துர்கா தேவி, இந்தியாவைச் சேர்ந்தவர்; இது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வேலைப்பாடு
Source : Libertarian
நமக்குத் தெரிந்த கதை அம்ருதத்திற்கு முன் விஷம் சாப்பிட்ட சிவபெருமான்.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் மியூசியத்தின் கண்காட்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐசின்-லார்சா காலத்தின் (கிமு 2000-1600) படம் இங்கே
மிக முக்கியமாக உருவம் சிவலிங்கத்தின் கருத்தை பலப்படுத்துகிறது. பக்கங்களில் உள்ள இரண்டு மனிதர்களும் ஒரு குவளை அல்லது தண்ணீர் பானையை சுமந்து நிற்பது போல உள்ளது - இது மீண்டும் சிவலிங்கத்துடன் செல்லும் அம்சமாகும்.
ஜெயஸ்ரீ சரணாதமின் கூற்றுப்படி, "இரண்டு மனிதர்களும் நிர்வாணமாக இருக்கிறார்கள்; சிவனின் பக்தர்களான நாக சாதுஸ் (சித்தர்கள், யோகி)ஒப்பிடுவதை நாம் அறியலாம். அவர்களும் தாடியும் தலை முடியும்அறியலாம்".

நாக சாதுஸ் சொன்னதாக குறிப்புகள் உள்ளது. நாக சாதுக்கள் நாகத்திலிருந்து வருபவர்களாக இருக்கலாம் என்பது என் கருத்து.

இங்கே பாம்பில் இருந்து நாகாதேவர்களாக வந்தார்கள் என்று சில படங்கள் கூறுகிறது.

Source: Libertarian

இதை போல், பிரவீன் மோகன், நாகா கடவுள் பற்றி உள்ளது(வீடியோவைக் காண அவரது பெயரைக் கிளிக் செய்க). அவர் பல பண்டைய கால விஷயங்களை யூ டியூப் தொகுத்துள்ளார்.

நம் காலங்களில் முன். பண்டைய காலத்தில் அதாவது கிமு 3600 முதல் கிபி 500 வரை, மனித உடம்பும், விலங்குகள், பறவைகள் போன்ற முகங்களுடன் வாழ்ந்தார்கள் என்று நம் புராணம் கதைகளிளும் படித்து இருக்கோம். அதில் சில படங்கள் உலகத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ளதை காணலாம்.
வராஹா, விஷ்ணுவின் அவதாரம்; ஐஹோல், இந்தியா.
விஷ்ணு கருடன்்்், இந்தோனேசியா
நரசிம்ம, இந்தோனேசியா 

வரலாறு பொதுவாகப் பிரிக்கப்பட்டுள்ள வழிகள் மூன்று தனித்தனி காலங்களாக உள்ளன: பண்டைய காலம் (கிமு 3600 முதல் கிபி 500 வரை), இடைக்காலம் (500 -1500 முதல்), மற்றும் நவீன சகாப்தம் (1500 முதல் தற்போது வரை).

Tuesday, December 15, 2020

இறைவனைத் தவத்தால் உணர முடியும்

ஏனோர் பெருமையை னாகினும் எம்இறை
ஊனேய் சிறுமையுள் உட்கலந் தாங்குளன்
வானோர் அறியும் அளவல்ல மகா
மாதேவன்
தானே அறியும் தவத்திற்கு உள்ளே.

மந்திரம் - 490

 விளக்கம்:

அனைத்து தெய்வங்களையும் விட மாபெரும் பெருமையை உடைய எமது இறைவன் வினைகள் கர்மாக்கள் மூலங்கள் கொண்ட குறைகள் நிறைந்த உயிர்களின் உடல்களிலும் கலந்து இருக்கின்றான். அதாவது எம் தலைவனான இறைவன் ஊன் உடலில் உள்ள குற்றங்களிலும் கலந்து அவற்றுள் விளங்குகின்றான். வானுலகத்திலுள்ள தேவர்களாலும் அறிய முடியாத அளவு இருக்கும் மகாதேவனாகிய அந்த இறைவனை உயிர்கள் தனக்குள் தவம் செய்து நமக்குள்ளேயே அறியலாம்.


Source : Thirumoolar

Monday, November 23, 2020

உச்ச இறைநிலையே சோதி!

வள்ளலார் சிறப்பு மிக்க ஆன்மிகவாதிகளில் ஒருவர். இறைவன், ஜோதி வடிவில் இருப்பதாக தன் அருள் கொண்டு உணர்ந்தவர். அவர் வழி பின்பற்றும் பலரும் இன்றும், இறைவனை ஜோதி வடிவிலேயே வழிபாடு செய்து வருகிறார்கள். தான் வாழ்ந்த காலங்களில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர் வள்ளலார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மணியாய் மந்திரமாய் இருப்பது
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மந்திரமாய் மணியாய் இருப்பதை அருட்பா ஆறாம்திருமுறை "காட்சி களிப்பு"என்ற 41 வது தலைப்பில் 7வது பாடலில் ,
 மருந்தானை மணியானை வழுத்தா
         நின்ற மந்திரங்க
         ளானானை
         வானநாட்டு
விருந்தானை உறவானை நண்பினானை....
      என்று மருந்தாயும் மணியாயும் மந்திரமாயும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இருந்து அருள்பாளிப்பதையும் நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

 திருமூலரின் சொல்லும் சோதியின் சிறப்பு

மந்திரம் -15

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்து ஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 

பொருள் : 
சிவன் உலகினைப் படைப்பவனாயும் அழிப்பவனாயும் உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும், அவற்றைக் கடந்து நிறைந்து விளங்குகிறான். திருவருள் சோதியாகயும் குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும் படைத்துக் காத்து அழித்து உயிர்களுக்கு வினையை ஊட்டுவிப்பான்.

திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான் என்று கூறியுள்ளார்.

எட்டாம் திருமுறையில், 29 திருவாசகம்- அருட்பத்து,  பாடல் முதலில்   "சோதியே சுடரே சூழொளி விளக்கே...." என்று
திரு.மாணிக்கவசகர் கூறியுள்ளார். 

சோதிப் பிழம்பானவனே! ஒளிப் பிழம்பில் உள்ள கதிர்களாய் உள்ளவனே! சூழ்ந்த ஒளியை உடைய விளக்குப் போன்ற வனே!  என்று பொழிப்புரையாகும்.

நம் சித்தர்கள், ஞானிகள் ஜோதியை ஆண்டவனாக அறிந்து கொண்டார்கள். அதை போல் நாமும் சித்தர்கள் எழுதியுள்ள மந்திரங்கள் படித்து உணர்ந்து, அருள்ளொளியால் முத்தேக சித்தி அனுபவத்தைப் பெறுவதற்கு முயல்வோம்.

சர்வமும் அவனுக்குள் அடக்கம்.