Saturday, October 31, 2020

படித்ததில் பிடித்தது

நான் நானில்லை நீயும் நீயல்ல. நானும் நீயும் வேறில்லை நாம் என்றும் ஒன்றில்லை. யாருக்கு நீ மகனோ அவருக்கு நீ அப்பாவாய் இருந்ததும் ஒரு காலம். அப்பொழுது அப்பாவாய் நடத்தியிருக்க, இப்பொழுது தப்பாதே உன் காமம் ஓர் நாளும்.
வேருக்கு நீர்விடு. உனக்கான ஒரு வேருக்கு தவறாது நீர்விடு. புவனத்தில் உன் செல்வ வங்கி அதுதான். விருட்சம் வளர்ந்தால் தரித்திரியம் குறையும். துளசி வளர்த்தால் பக்தி வளரும். வேப்பிலை தழைத்தால் வீரம் வளரும். நெல்லி வேர்விட்டால் செல்வம் வேர் விடும்; பார்த்து வேருக்கு நீர்விட்டு. நீ பாதி குபேரனாகி விடுவாய்.

Source: புத்தகம்- அகமுகநாதர் குருஜி - திருமூலரின் சமாதியோகம்.

Friday, October 30, 2020

பிரம்மாண்டமான நம் கோயில்கள்

Credit : Lost temples
கோபேஷ்வர் கோவில்.
இடம்: கித்ராபூர், கோலாப்பூர் மாவட்டம், மகாராஷ்டிரா.
இந்த கோவிலை "ஷியாஹாரா மன்னர்" "கந்த்ராராதித்யா" என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோயில் பகவான் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Credit : Lost temples
திருவண்ணாமலை  கோயில், தமிழ்நாடு.
பஞ்சபூதஸ்தலத்தில் ஒன்றான "அக்னி" கோயில்.
கடினமான பாறைகளில் ஒன்றிலிருந்து வளைந்திருக்கும் அதாவது கிரானைட்!

Credit : Lost temples
ஜாம்புகேஸ்வரர் கோவில், திருச்சி (திருச்சிறாப்பள்ளி), தமிழ்நாடு.
பஞ்சபூதஸ்தலத்தில் ஒன்றான "நீர்" கோயில்.
இந்த கோவில் 1800 ஆண்டு முன் பழமையானது! 

Capture by V.Goplan
பிரஹதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், தமிழ்நாடு
ராஜா ராஜா சோழரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவில்!
நம் பாரம்பரிய சின்னம்.
Credit: V.Gopalan 

சாஸ்-பாஹு கோவில், குவாலியர், மத்தியப் பிரதேசம்

இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

கைலாசா கோவில், எல்லோரா, மகாராஷ்டிரா.
ஒரே மலை பாறையில் கட்டப்பட்டது.


credit: G.Mani 

நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலியில், தமிழ் நாடு.


சாமூண்டிஸ்வரி கோவில், மைசூர், கர்நாடக்கா

ஹொயசலேஸ்வரர் கோயில், ஹசனா

ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு.

பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று, பகவான் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்து கோயில்கள் மற்றும் பூமி / பிருதிவி லிங்கத்தை குறிக்கிறது

இந்த கோயில் 2000 ஆண்டு பழமையான சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு பங்களிப்பு ஆரம்பகால சோழர்கள், பல்லவர்கள், பின்னர் சோழர்கள் செய்தனர். ராஜா கோபுராவை விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயர் கட்டினார்.

Source: twitter- lost temple, Google, pinterest, flickr, facebook, Wikipedia







Tuesday, October 27, 2020

Spiritual stories


An old man comes to Buddha, he seemed somewhere around 70 years of age. He was enlightened like Buddha.

Buddha asked him, “What's your age?”

He said, “I am 4 years old.”

Buddha was staggered totally.

Buddha said to him, “But you seem 70 years old.”

Old man replied, “ I became enlightened 4 years before and the day I was awakened I count it my real birthday.

Buddha immediately declared, now onwards, my sannyasi too will get the real birth when they become enlightened.

Source: quora


The sage, after travelling a half of his life and being an advisor of the king, has retired and prayed, preparing to stand before God. But still he communicated with students, who were allowed to ask him the trickiest questions.

So, he was asked:

— Why the Creator does not let people make a paradise on the earth during their lifetime?

— If they could, they would do it, — was his answer.

But his student continued asking:

— It comes so that people cannot be better? But it‘s all in God‘s hands, isn‘t it? And he wishes his children to joy him. How it can be?

The sage looked at him, smiled and asked:

— Do you want to say that God can do nothing with us and ask to give him an advice?

The student bowed his head silently.

The sage said:

— Isn’t it better to start from your own? Do not think about people too much, remember about yourself. Everyone will have to answer for his own.

Source:  Inspirational stories


An aspiring student of martial arts went to a great teacher and said, “I am devoted to studying your martial arts system. How long will it take me to master it?”

The teacher’s reply was, “Ten years.”

Impatiently, the student answered, “But I want to learn it faster and I will work very hard. If I practice every day, ten or more hours a day, how long will it take then?”

The teacher thought for a moment, “20 years.”

A mind which is more calm helps you to concentrate better, attaining undivided focus and it makes you proactive. Be devoted to your work.


How can I train my brain to stay focused?

This state of awakening is the need for focus.

There is a story related with it.

In ancient India there was a King called Janaka, who was also a sage. One day Janaka was taking a nap on his flower-strewn bed with his servants fanning him and his soldiers standing guard outside his door.

As he dozed off, he had a dream in which a neighboring King defeated him in battle, took him prisoner, and had him tortured. As soon as the torture began, Janaka woke with a start to find himself lying on his flower-strewn bed with his servants fanning him and his soldiers on guard.

Once again he dozed off and had the same dream. And once again he woke up to find himself safe and comfortable in his palace.

Now Janaka began to be disturbed by several thoughts: While he was asleep, the world of his dreams had seemed so real. Now that he was awake, the world of the senses seemed real. Which of these two worlds is the real one, he wanted to know.

None of the philosophers, scholars, and seers he consulted could give him an answer. And for many years he searched in vain, till one day a man called Ashtavakra knocked at the door of the palace. Now, Ashtavakra means " eight (ashta) deformed or crooked parts of body," and he got that name because that is exactly what his body had been from birth.

At first the King was not disposed to take this man seriously. "How can a misshapen man like you be the carrier of a wisdom denied to my seers and scholars?" he asked.

"Right from my childhood, all avenues have been closed to me - so I avidly pursued the path of wisdom," was Ashtavakra's reply.

"Speak, then," said the King.

So this is what Ashtavakra said: "O King, neither the waking state nor the dream state is real. When you are awake, the world of dreams does not exist and when you dream the world of the senses does not exist. Therefore, neither is real."

"If both the waking and the dream states are unreal, then what is real?" asked the King.

"There is a state beyond these two. Discover that. It alone is real.


Ideal for life

God met with an old saint and told him, “To ask a boon.”

Saint said, “I don't need anything, I am so content with my life.”

God said, “But it's my wish to grant you something.”

Saint said, “You decide what to give, If you are willing to bless me with a boon.”

God said, “Whenever you pass like this to any creature or tree plant or anything that is dead, it will revive.”

Saint said, “I will accept this boon but make one change in it, whenever I will be passing and something is revived then I shouldn't be aware that I revived it because I can get filled with ego that I have such power to revive anything.”

God smiled and said, “As you wish.”

We must have that ideology to help others but we need to remain untouched with ego, nowadays, most of the people are doing good things but filling themselves with ego because they claim we are always indulged in helping others.

Helping someone should be like, you are helping others because it is in your root and you are reviving the humanity with your small contribution, this must be an ideal life to live.


Source: quora

Sunday, October 25, 2020

ஓம்' என்ற சொல் ஏன் உச்சரிக்க வேண்டும்

                                 'ஓம்'

ஓம் என்பது பிரணவசொரூபம்.

எந்த நேரத்திலும் 'ஓம்' 'ஓம்' என்று உச்சரித்துக் கொண்டிருந்தால் மிகசிறப்பு. இதனால் எல்லாவித துன்பங்களும் விலகும். வரவிருக்கிற துன்பங்களும் நெருங்காது. மூலாதாரத்திலிருந்து மூளை வரை உள்ள எல்லா நரம்புகளையும் தொட்டு இயங்கச் செய்கிறது. இதை உச்சரிப்பதால் வினைகள், விதிகள் வராது. பத்மாசனத்தில் அமர்ந்து கூறினால் விதியும், வினைப்பயனும் பாதிக்காது.

நம் சித்தர்கள் கூறிய திருமந்திரத்தில் 'ஓம்' என்ற சிறப்புகளை காண்போம்.

திருமூலர் - மந்திரம் 944

"ஓமென்று எழுப்பித் தன் உத்தம நந்தியை நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந்தாரே"

பொருள்:

மூலாதாரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சத்தியை "ஓம்" எனும் பிரணவ யோகத்தால் எழுப்பி புருவமத்தியில் கொண்டு வந்து அந்த பிரணவ ஒளியை தரிசிக்க அறிந்தவர்கள் மாமன்றில் ஆடும் உத்தம நந்தியைக் கண்டு மகிழ்ந்திருப்பர். நெற்றிப்பிரதேசமே மாமன்று, சிற்றம்பலம் சிதாகாசம் எனப்படும். பிரணவ ஒளியைக் காண்பவர்க்கே இறைவன் திருவருள் கிடைக்கும் என்பது வலியுறுத்தப்படுகிறது

சிவபுராணத்தில் மாணிக்கவாசகர்
எழுத்திய பாடல் ஒன்றில்

மந்திரம் எண் 35

"மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள்
ஓங்கார மாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே. "

பொருள்: 

உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேறன்
நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியால் எழுந்த
உண்மைப் பொருளே!
காளையை ஓட்டி வருபவனே! வேதங்கள்
ஐயா! எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பல பல தன்மைகளைப் பெருகி
ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே!

"ஓம்" என்ற சொல் ஆழமாக உச்சரிப்பதால் பல பல தன்மைகளை வளரும். வினைகளை எல்லாம் மறையும். பல புது வழிகள் கிடைக்கும்.

தியானத்தில் சொல்லும் மிக சிறந்த மந்திரம் 'ஓம்'. 

Source: திருமூலர் திருமந்திரம் , சிவபுராணம்

Thursday, October 22, 2020

தியானம் செய்வது எப்படி?

 


கண்ணை மூடி அமர்ந்து கொண்டு எண்ணங்களோடு போராடிக் கொண்டிருப்பதையும் நாம் தியானம் என்று கொள்கிறோம். அது தியானமாகாது. தியானத்தற்கான முன்னோட்டம் அல்லது முயற்சி என்று சொல்லிக் கொள்ளலாம். முதலில் மனம் பரிபக்குவமடைய வேண்டும். பரிபக்குவம் என்று சொன்னால் அது எண்ணங்களைத் தவிர்ப்பதல்ல. அப்படி முற்றிலுமாக யாராலும் எண்ணங்களை தவிர்க்கவோ, ஒழிக்கவோ முடியாது. புறவுலக வாழ்வோடு இணைந்திருக்கிற நாம் உடனடியாக அதைத் துண்டித்து விட முடியாது. படிப்படியாகவே பக்குவத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். அப்படித்தான் பெறவும் முடியும். எது நல்லது கெட்டது என்பதைத் தீர ஆராய்ந்து தீயவற்றை விலக்கி நல்ல செயல்களை, எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான நம் உள்முகமான முயற்சியும், இயம, நியம பயிற்சிகளும் சேர்ந்துதான் மனப்பரிபாகத்தை ஏற்படுத்தும். இப்போது தீய எண்ணங்கள் மற்றும் செயல்களில் இருந்து நாம் விடுபட்டு நல்ல எண்ணங்களையும், செயல்களையும் உடையவர்களாக மாறி விடுகிறோம். இதனால் நாம் அடையும் மிகப் பெரிய மாற்றம் என்னவெனில், சத்துவ குணம் நம்மிடம் மேலோங்கி விடுகிறது. ஒருவரிடம் சத்துவகுணம் மேலோங்கி வருகிற அளவு அவர் யோக சாதனங்கள் புரிய தயாராகி வருகிறார் என்பதை கண்டு கொள்ள முடியும். அதன் பிறகு உடலை பலப்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. நீண்ட நேரம் தியானத்தில் அமர்வதற்கும், நோய் என்கிற தடை ஏற்படாமல் இருக்கவும் ஆசனம் தேவைப்படுகிறது. இது வரை நாம் நம் எண்ணங்களையும், செயல்களையும், உடலையும் சரி செய்து கொண்டோம். இனிதான் நாம் மனதை வசப்படுத்த வேண்டிய கட்டத்திற்கு வருகிறோம். அதற்கு பிராணனை வசப்படுத்த வேண்டும். ஏனெனில் பிராணனின் பற்றாக் குறையே நம் மனதின் பலவீனமான சலன நிலைக்குக் காரணமாக அமைகிறது. எனவே பிராணாயாமத்தை தவறாது செய்து வர வேண்டும். அப்போது பிராணனின் திணிவு பெற்ற நிலை நமக்கு மனோதிடத்தைத் தருகிறது. இங்குதான் புலனடக்கம் என்கிற பிரத்தாயாகாரம் வருகிறது. புலனடக்கம் என்று சொல்லழகுக்காகச் சொல்லப்படுகிறதே அன்றி புலன் ஒடுக்கம் என்பதுதான் சரி. அதாவது ஆமை ஒடுங்குவது போல் ஒடுங்குவது. தேவைப்படும் போது தேவைப்படும் காரியங்களை புலன் வழியாகப் புரிந்து விட்டு மீண்டும் ஒடுங்கிக் கொள்வது. அடங்குவது என்றால் அது செயலற்ற நிலையாகும். அது இறுதி நிலை. எனவேதான் வள்ளுவப் பெருந்தகை ஒருமையில் ஆமை போல் ஐந்தடக்கில் என்கிறார். அடக்கம் என்பதை ஒடுக்கம் என்று கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒடுங்குவதும் விரிவதும்தான் பரமாத்தாவின் இயல்பு. அதுவே நம் இயல்பும் கூட. ஆனால் நாம் ஒடுங்குவதேயில்லை. எனவே, சத்துவகுணம் மேலோங்கியவர்களுக்கே பிரத்தியாகாரம் வசப்படும் என்றுணர்க. இதன் பிறகே மனதை குவிப்பது என்ற தாரணைப் பயிற்சி வருகிறது. நான் முன்பு சொன்னது போல, ஒடுங்காமல் கண்டபடி ஓடும் மனதை ஒடுக்கிப் பழகியவர்கள் அதை ஒரு புள்ளியில் குவித்துப் பழக வேண்டும். பழக்கம் காரணமாக மனம் நழுவி நழுவி ஓடும். சலித்து விடாமல் விடாமுயற்சியுடன் குவித்து வரவர வெற்றி ஏற்படும். அந்த வெற்றியின் பரிசுதான். தியானம். உடல்பலமாகவும், மனம் சாந்தமாகவும், குருவின் வார்த்தைகளில் நம்பிக்கையும், உணவு, உறக்கம் போன்றவற்றில் நிதானமும், இந்த சம்ஸார பந்தத்தின் நிலையற்ற தன்மையை உணர்ந்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்களே யோக சாதனங்களைச் செய்யத் தகுதி உள்ளவர்கள். ''அஹங்காரம் பலம் தர்பம் காமம் குரோதம் பரிக்ரஹம் விமுச்ய நிர்மன; நாந்தோ ப்ரஹ்ம பூயாய கல்பதே '' என்கிறார் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் கீதையில். அதாவது அஹங்காரம், மிருக பலம்,மூர்க்கம், இச்சை, கோபம், பேராசை இவைகளைக் களைந்த தன்னலமற்றவனும் அமைதியானவனுமாகிய மனிதனே பரம்பொருளை அடையத் தக்கவன் என்கிறார். மேலே காணும் இத்தீய குணங்கள் எல்லோரிடத்தும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விட்டு விலகியவனே மெய்ப் பொருளை அறிந்து, உணர்ந்து, அடைய முடியும். அதிக சிற்றின்ப இச்சையில் திளைத்துக் கிடப்பவர்களும், ஆணவம், கர்வம் உடையவர்களும், பொய், கபடம், துரோகம் போன்ற செயல்களைச் செய்பவரும், குரு, சாது, ஞானிகளை அவமதிப்பவர்களும், குதர்க்கமான மனப் போக்கு உடையவர்களும் என்னதான் முயன்றாலும் யோகத்தின் பலனை அடைய முடியாது. ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளைச் செய்து ஒழுக்கம், பரோபகாரம், குருவுக்குப் பிரியமாக நடந்து கொள்வது, அஹிம்சை, வாய்மை, கொடை, சகிப்புத்தன்மை, பேதமற்ற மனநிலை, சுயநலமின்மை, அடக்கம், பெற்றோரை பேணுதல் போன்ற நல்ல குணங்களை விருத்தி செய்து வருவீர்களேயானால் தீய குணங்கள் யாவும் விலகி நல்ல குணம் மேலோங்கும். நம் பிறப்பின் நோக்கமே தெய்வீக வாழ்க்கை வாழ்ந்து பூரணத்தை அடைய வேண்டும் என்பதுதான். அது என்ன தெய்விக வாழ்க்கை ? உயர்ந்த இலட்சியத்தையும், உன்னதமான உணர்வுகளையும் ஒட்டி, திட்டமிட்டு வாழும் வாழ்க்கையே தெய்வீகமான வாழ்க்கை. மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டதன் காரணம், அவன் ஆறு அறிவின் துணையால் ஆறு நிலைகளைக் கடந்து ஏழாம் நிலையான தியான நிலையை எட்ட வேண்டும் என்பதற்காகத்தான். அப்படி ஏழாம் நிலையை எட்டிப் பிடித்து நிலைத்தவனே எட்டா நிலையான எட்டாம் நிலையை அடைய முடியும்.


Friday, October 16, 2020

நவராத்திரி வாழ்த்துக்கள்


ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே!!
***
 காயத்ரி மந்திரம்

ஓம் திரிபுரசுந்தரி விதம்ஹே
காமேஷ்வரிச்சா தீமஹி
தந்தோ தேவி ப்ரசோதயாத்
***
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
***
ஓம் மஹா லட்சும்யைச வித்மஹே விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லட்சுமி ப்ரசோதயாத்
***
ஓம் பகவத்யை ச வித்மஹே மாஹேச்வர்யைச் தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்
***
ஓம் துர்கா காயத்ரி

ஓம் காத்யாயநாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி தந்நோ துர்கி: ப்ரசோதயாத்

ஓம் காத்யாயந்யை வித்மஹே கன்யாகுமார்யை தீமஹி தந்நோ துர்கா ப்ரசோதயாத்

ஓம் ஐம் வாக்தேவ்யை வித்மஹே காமராக்ஞை தீமஹி தந்நோ தேவீ ப்ரசோதயாத்
****
ஓம் கராளவதநாயை வித்மஹே சிரோமாலாயை தீமஹி தந்நோ சாமுண்டீ ப்ரசோதயாத்

Source : Google images