Friday, February 14, 2020

மந்திரங்களுக்குள் மறைந்திருக்கும் அர்த்தங்கள் - பீஜம் மந்திரங்கள்

'பீஜம்' என்பதற்கு 'விதை' என்பது பொருள். 

சிறிய விதைக்குள் மாபெரும் மரம் வளர்வதற்காக காத்திருக்கும் நிலையை இது உணர்த்துகிறது. இந்த பிரபஞ்சம் மற்றும் பஞ்சபூதங்கள் யாவும் அதன் சூட்சுமமான நிலையில் இருந்துதான் தற்போது பார்க்கப்படும் நிலைக்கு வந்துள்ளன. அதன் தோற்ற நிலைக்கு அடிப்படையாக உள்ள நுட்பமான ஒலி வடிவமே 'பீஜம்' ஆகும். அதன் அடிப்படையில், ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனியான 'பீஜ மந்திரம்' உள்ளது.

மந்திர தேவதைகளின் மூன்று பிரிவுகள் உள்ளன:
* சிறு தேவதைகள் (கருப்பண்ணசாமி, குட்டிச சாத்தான், யட்சினி)
* தேவதைகள் (காளி, துர்க்கை, ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள்)
* அதிதேவதைகள் ( சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி).

பஞ்ச பூத மந்திரங்கள்

பீஸ் மந்திரங்களுக்கு உதாரணமாக, சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ள, பஞ்ச பூதங்களுக்கு உரியவற்றை இங்கே பார்க்கலாம். அவை குறிப்பிட்ட வடிவம் மற்றும் நிறம் ஆகிய தன்மைகள் கொண்டவை.

நிலம் - இதற்குரிய பீஜம் 'லம்' ஆகும். இது சதுர வடிவமாகவும், பொன் மஞ்சள் நிறத்தையும் கொண்டது. 

நீர் - இதற்குரிய பீீீீஜம் 'வம்' ஆகும். இது பிறை சந்திரனின் வடிவம் கொண்டது. இதன் நிறம் வெள்ளியின் வண்ணம் ஆகும்.

 நெருப்பு - இதன் பீஜம் 'ரம்' என்பதாகும். நெருப்பை குறிக்கும் இதன் வடிவம் முக்கோணம் ஆகும். சிவந்த நிறம் கொண்டது.

காற்று - காற்றுக்கான பீீீீீஜம்  ' யம்' ஆகும். இது அறுகோண வடிவம் கொண்டது. நீலம் மற்றும் கருமை நிறத்தைப் பெற்றிருக்கும்.

ஆகாயம் - ஆகாயத்தை குறிக்கும் பீஜம் 'ஹம்' ஆகும். இது வட்ட வடிவம் உடையது. கத்தரிப்பூவின் ஊதா நிறம் கொண்டது.


Source: Thanthi