Thursday, April 23, 2020

மந்திரங்களுக்குள் மறைந்திருக்கும் அர்த்தங்கள்

மந்திரம் என்பது, 'உச்சரிப்பவரை காக்கும் சொல்' என்ற பொருள் கொண்டது.

மந்திரங்கள் அவற்றின் பயன்களின் அடிப்படையில்
*தூய மந்திரங்கள்
*மாய மந்திரங்கள்
*ஆக்கும் மந்திரங்கள்
*காக்கும் மந்திரங்கள்
உள்ளிட்ட பல நிலைகளில் அமைந்துள்ளது.
எந்த ஒரு மந்திரமும் சப்த பிரபஞ்ச மண்டலத்தில், அதற்கான அலைவரிசையில் குறிப்பிட்ட அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் விளைவுகள் ஏற்படுகின்றன என்பது ஆன்மீக நியதி.

சப்த பிரபஞ்ச வடிவமாக உள்ள  வேதங்களில் பொதிந்துள்ள மந்திரங்களை கண்டறிந்து வெளிப்படுத்தியவர்கள், 'ரிஷிகள்' ஆவார்கள்.

இந்த ரிஷிகளின், மகரிஷி, பிரம்மரிஷி, ராஜரிஷி, வைஸ்யரிஷி, ஜனரிஷி, தபரிஷி, ஸதயரிஷி, காண்டரிஷி, தேவரிஷி, சூதரிஷி என்ற பல்வேறு வகையினர் உள்ளதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரிஷிகள் கண்டறிந்த மந்திரங்களுக்கு 7 விதமான பண்புகள் உள்ளன. அவை
1) ரிஷி- மந்திரத்தை கண்டறிந்தவர்
2) 'சந்தஸ்' - மந்திரம் உச்சரிக்கப்படும் முறை
3) 'தேவதை'- மந்திரத்திற்குரிய கடவுள்
4) 'பீஜம்' - மூல சத்தியாக உள்ள சொல்
5) 'சக்தி' - அதன் சக்தி நிலை
6) 'கீலகம்' - அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் பகுதி
7) 'நியாசம்' - உச்சரிப்பில் போது உடலின் பகுதிகளை ஒழுங்குபடுத்துவது ஆகியவையாகும். 

Source: Thanthi