Tuesday, June 23, 2020

ஆன்மா

ஆன்மா...

உடல் பஞ்சபூதங்களால் ஆனது...!
ஆன்மா உணர்வு பூர்வமானது...! 

உடலுக்கு உருவமுண்டு...! 
ஆன்மாவிற்கு உருவமில்லை...! 

உடலைப் பார்க்க முடியும்...!
ஆன்மாவை பார்க்க முடியாது...!

உடல் ஸ்தூலமானது...! 
ஆன்மா சூட்சமமானது...! 

உடலுக்கு பெயருண்டு...!
ஆன்மாவிற்கு பெயரில்லை...! 

உடல் ஆண் பெண் என வகைப்படும்...!
ஆன்மா ஆணுமல்ல பெண்ணுமல்ல...! 

கண்கள் காண்கிறது...! 
ஆன்மா நினைவு செய்கிறது...! 

காதுகள் கேட்கிறது...!
ஆன்மா புரிந்து கொள்கிறது...! 

மூக்கு சுவாசிக்கின்றது...! 
ஆன்மா நுகர்கின்றது...!

வாய் உண்கிறது...! 
ஆன்மா சுவைக்கின்றது...! 

தோல் தொடுகிறது...!
ஆன்மா  ஸ்பரிசிக்கின்றது...! 

உடலுக்கு ஐம்புலன்கள் உண்டு...!
ஆன்மாவிற்கு அஷ்ட சக்திகள் உண்டு...!

உடல் உழைக்கின்றது...! 
ஆன்மா சிந்திக்கின்றது...!

உடல் உணவைப் பெறுகிறது...! 
ஆன்மா அமைதியைப் பெறுகிறது....!

உடல் உருவத்தில் வளர்கிறது...!
ஆன்மா அறிவில் வளர்கிறது...!

உடலுக்கு வைத்தியம்    பார்க்கப்படுகிறது...! 
ஆன்மாவிற்கு வழிபாடு தியானம் 
செய்யப்படுகிறது....!

உடல் விபத்தை சந்திக்கின்றது...! 
ஆன்மா வலியை அனுபவிக்கின்றது....! 

உடலுக்கு ஆதாரம் சுவாசம்...!
ஆன்மாவிற்கு ஆதாரம் விருப்பம்...!

உடலுக்கு கண்களே ஒளி...!
ஆன்மாவிற்கு ஞானமே ஒளி...!

உடலுக்கு 16 மண்டலங்கள் உண்டு...!
ஆன்மாவிற்கு 16 குணங்கள் உண்டு...!

உடல் ஒரு கருவி...!
ஆன்மா அதனை இயக்குபவர்...!

உடல் ஒரு வீடு...!
ஆன்மா அதில் குடியிருப்பவர்...!

உடல் ஒரு வாகனம்...!
ஆன்மா அதன் ஓட்டுனர்...!

உடல் ஒரு அடிமை...!
ஆன்மா சுதந்திரமானது...! 

உடல் ஒரு படைப்பு...!
ஆன்மா படைப்பவர்...!

உடல் உருவாக்கப்படுகிறது...! 
ஆன்மா ஆதி அந்தமற்றது...! 

உடலுக்கு தந்தை வேறுபட்டவர்...!
அனைத்து 
ஆன்மாக்களுக்கும் தந்தை ஒருவரே...!

உடலுக்கு இரத்த சம்பந்தம் உண்டு...!
ஆன்மாவிற்கு உணர்வு சம்பந்தம் உண்டு...!

உடல் அழியக்கூடியது...! 
ஆன்மா அழிவற்றது...! 

உடல் எரிக்கப்படுகிறது...! 
ஆன்மாவை எரிக்க இயலாது...! 

உடல் புதைக்கப்படுகிறது...! 
ஆன்மாவை புதைக்க இயலாது...! 

உடல் பூமிக்குள் சேர்க்கப்படுகிறது...! 
ஆன்மா இறைவனோடு சேர்ந்து விடுகிறது....!
உடல் நினைவு செய்யப்படுகிறது...! 
ஆன்மா ஆசிர்வதிக்கப்படுகிறது...!

உடலை பிரிக்க  இயலும்...!
ஆன்மாவை பிரிக்க இயலாது...!

உடல் எல்லைக்குள்உட்பட்டது...! 
ஆன்மா எல்லைக்குஅப்பார்ப்பட்டது...!

உடல் ஒரு அத்தியாயம்...! 
ஆன்மா ஒரு முழுக்கதை...! 

உடலைப் பற்றியது பௌதீகம்...! 
ஆன்மாவைப் பற்றியது ஆன்மிகம்...! 

உடலை மட்டும் அறிவது அசுரகுணம்...! 
ஆன்மாவை  அறிவது தேவகுணம்...!

இறைவன் அருளால்.........
வாழ்க வளமுடன்...! 
வளர்க அருளுடன்.

Thursday, June 18, 2020

Life Quotes "You are just who you are"


*Remember that the best relationship is one in which your love for each other exceeds your need for each other.

*In disagreements with loved ones, deal only with the current situation. Don't bring up the past.

*We can live without religion and meditation, but we cannot survive without human affection.

*With realisation of one's own potential and self confidence in one's ability, one can build a better world.

*If you want others to be happy, practice compassion. If you want to be happy, practice compassion.

*If you can, help others; if you cannot do that, atleast do not harm them.

*Be kind whenever possible. It is always possible

*In the practice of tolerance, one's enemy is the best teacher.

*The roots of all goodness lie in the soil of application for goodness.

*Follow the three R's: Respect for self. Respect for others. Responsibility for  all your actions.

*Through violence, you solve one problem, but you sow the seeds for another.

*Open your arms to change, but don't let go of your values.

*When you lose, do't lose the lesson.

*Don't let a little dispute injure a grest relationship.

*When you realise you've made a mistake, take immediate steps to correct it.

*Once a year, go someplace you've never been before.

*Judge your success by what you had to give up in order to get it.

*There is only one important point you must keep in your mind and let it be your guide. No matter what people call you, you are just who you are. Keep to this truth. You must ask yourself how is it you want to live your life. We live and we die, this is the truth that we can only face alone. No one can help us, not even the Buddha. So consider carefully, what prevents you from living the way you want to live your life?

*The purpose of our lives is to be happy.

Tuesday, June 16, 2020

வாழ்க்கை ஒரு வட்டம். இன்று நீ பிறக்கு செய்வதை நாளை பிறர் உனக்கு செய்வர்


நெத்தியடி - தவறாமல் படியுங்கள் 
»»» தாயை முதியோர் இல்லங்களில் விடும் ஆண் மகன்களுக்கு இந்த கதை ஒரு சாட்டை.

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.

ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.

அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினைத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: "மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?"

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: "அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்"

## வாழ்க்கை ஒரு வட்டம். இன்று நீ பிறக்கு செய்வதை நாளை பிறர் உனக்கு செய்வர்