Monday, November 23, 2020

உச்ச இறைநிலையே சோதி!

வள்ளலார் சிறப்பு மிக்க ஆன்மிகவாதிகளில் ஒருவர். இறைவன், ஜோதி வடிவில் இருப்பதாக தன் அருள் கொண்டு உணர்ந்தவர். அவர் வழி பின்பற்றும் பலரும் இன்றும், இறைவனை ஜோதி வடிவிலேயே வழிபாடு செய்து வருகிறார்கள். தான் வாழ்ந்த காலங்களில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர் வள்ளலார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மணியாய் மந்திரமாய் இருப்பது
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மந்திரமாய் மணியாய் இருப்பதை அருட்பா ஆறாம்திருமுறை "காட்சி களிப்பு"என்ற 41 வது தலைப்பில் 7வது பாடலில் ,
 மருந்தானை மணியானை வழுத்தா
         நின்ற மந்திரங்க
         ளானானை
         வானநாட்டு
விருந்தானை உறவானை நண்பினானை....
      என்று மருந்தாயும் மணியாயும் மந்திரமாயும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இருந்து அருள்பாளிப்பதையும் நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

 திருமூலரின் சொல்லும் சோதியின் சிறப்பு

மந்திரம் -15

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்து ஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 

பொருள் : 
சிவன் உலகினைப் படைப்பவனாயும் அழிப்பவனாயும் உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும், அவற்றைக் கடந்து நிறைந்து விளங்குகிறான். திருவருள் சோதியாகயும் குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும் படைத்துக் காத்து அழித்து உயிர்களுக்கு வினையை ஊட்டுவிப்பான்.

திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான் என்று கூறியுள்ளார்.

எட்டாம் திருமுறையில், 29 திருவாசகம்- அருட்பத்து,  பாடல் முதலில்   "சோதியே சுடரே சூழொளி விளக்கே...." என்று
திரு.மாணிக்கவசகர் கூறியுள்ளார். 

சோதிப் பிழம்பானவனே! ஒளிப் பிழம்பில் உள்ள கதிர்களாய் உள்ளவனே! சூழ்ந்த ஒளியை உடைய விளக்குப் போன்ற வனே!  என்று பொழிப்புரையாகும்.

நம் சித்தர்கள், ஞானிகள் ஜோதியை ஆண்டவனாக அறிந்து கொண்டார்கள். அதை போல் நாமும் சித்தர்கள் எழுதியுள்ள மந்திரங்கள் படித்து உணர்ந்து, அருள்ளொளியால் முத்தேக சித்தி அனுபவத்தைப் பெறுவதற்கு முயல்வோம்.

சர்வமும் அவனுக்குள் அடக்கம்.

Saturday, November 21, 2020

குண்டலினியின் இருப்பிடம்

குண்டலினியின் இருப்பிடம்

எருவிடும் வாசற்கு இருவிரல் மேலே கருவிடும் வாசற்கு இருவிரல் கீழே உருவிடும் சோதியை உள்க வல்லார்க்கு கருவிடும் சோதி கலந்து நின்றானே.

மந்திரம். 584

மலம் கழிக்கும் வாயிலான குதத்திற்கு இரண்டு விரல் மேலே, கருவுண்டாகும் வாயிலாகிய யோனிக்கு இருவிரல் கீழுள்ள இடத்தில் ஒளிவடிவில் அமைந்துள்ள குண்டலினியை நினைக்க வல்லார்க்கு மூலப்பொருளாகிய சிவசக்தியை சோதி வடிவில் தரிசிக்கலாம்

இம்மந்திரம் மூலாதாரத்தின் இடத்தை சரியானபடி அளவிட்டுக் காட்டுகிறது. வர்மக்கலையில் மூலாதாரம் உள்ள இடம் மூல வர்மம் என்று கூறப்படும். மூலாதாரம் என்பது தண்டுவடத்தின் அடிப்பகுதியில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மூலாதாரச் சக்கரத்தை மூலபந்தம் அஸ்வினி முத்திரை மூலம் அறிந்து கொள்ளலாம்.

மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை (மந். 690) என்பதற்கிணங்க மூலாதாரத்திலிருக்கும் சிவ சக்தியாகிய ஓங்காரத்தை எழுப்பாமல் எந்தவொரு ஆன்மீக செயற்பாடும் பலனளிக்காது.



Sunday, November 8, 2020

ஏன் ஶ்ரீ விநாயகர் சன்னதிக்கு முன் தலையில் இரு கையால் கொட்ட வேண்டும்?


அகத்தியர் படத்தில் இக்காட்சியை பார்த்திருப்பீங்க.. 
விநாயகர் பெருமான் தான் இந்த நாடகம் நடத்தினார் என்று அகத்தியர் தன் தவறை புரிந்துக்கொண்டு, அவசரத்தில் தவறாக முடிவு செய்துள்ளேன் என்று தன் இரு கையால் முன் தலையை கொட்டிக் கொண்டார். ஏன் அப்படி செய்தார் தெரியுமா? ஏன் முன் தலையை கொட்டிக் கொண்டார்?
இதற்கு அறிவியல் அர்த்தங்களும் உள்ளன.
முதலில் நம் முன் பகுதி மூளையை பற்றி இன்றைய அறிவியிலாக அறியலம். 

சிந்தனை, நினைவகம், உணர்ச்சி, தொடுதல், மோட்டார் திறன்கள், பார்வை, சுவாசம், வெப்பநிலை, பசி மற்றும் நம் உடலைக் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு செயல்முறையையும் கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான உறுப்பு மூளை.

பெருமூளை (மூளையின் முன்) வலது மற்றும் இடது அரைக்கோளங்களால் ஆனது. பெருமூளை செயல்பாடுகளில் பின்வருவன அடங்கும்:
* இயக்கத்தின் துவக்கம்,
* இயக்கத்தின் ஒருங்கிணைப்பு, 
* வெப்பநிலை,
* தொடுதல்,
* பார்வை, 
* கேட்டல், 
* பேச்சு மற்றும் மொழி, 
* தீர்ப்பு, 
* பகுத்தறிவு, 
* சிக்கல் தீர்க்கும், 
* உணர்ச்சிகள் மற்றும் கற்றல்.

மூளையின் முன் பகுதியில் அமைந்துள்ள ஃப்ரண்டல் லோப் (முன் மடல்), நான்கு முக்கிய லோப்களில் (மடல்கள்)மிகப்பெரியது மற்றும் இது உங்கள் உணர்ச்சி கட்டுப்பாட்டு மையமாகவும், நமது ஆளுமை மற்றும் முடிவெடுக்கும் திறன்களுக்கான வீடாகவும் கருதப்படுகிறது.

மூளையில் உள்ள உணர்ச்சி மற்றும் நினைவக மையங்களுடன் ஃப்ரண்டல் லோப்கள் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தீர்மானிக்க அனுமதிக்கிறது.  எளிமையாகச் சொல்வதானால், விஷயங்களைச் சிந்திக்கவும் முடிவெடுப்பதை பகுத்தறிவு செய்யவும் இது நம்மை அனுமதிக்கிறது.

முன்பக்க மடல் உங்கள் தன்னார்வ தசைகள் அல்லது பைக் சவாரி செய்ய நீங்கள் பயன்படுத்தும் தசைகள், ஜாக், ஒரு பேஸ்பால் எறியுங்கள் அல்லது பிற நனவான இயக்கங்களை கட்டுப்படுத்துகிறது. உங்கள் மூளையின் பிற பகுதிகள் தன்னிச்சையான இயக்கம் மற்றும் தசை ஒருங்கிணைப்பைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், இயற்கையான சூழலில் அல்லது உடலின் நோக்குநிலையில் உங்கள் உடலின் நிலையை தீர்மானிக்கும் திறனும் முன் மடல்யின் செயல்பாடாகும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் சரியான முறையில் தொடர்புகொள்வதற்கும், தொடர்புகொள்வதற்கும் திறனை முன் மடல் நமக்கு வழங்குகிறது. மூளையின் இந்த பகுதி மற்றவர்களின் சிந்தனையையும் அனுபவத்தையும் புரிந்து கொள்ளவும் அனுமதிக்கிறது, இது ஒரு சமூக சூழ்நிலையில் வைக்கப்படும்போது எவ்வாறு பதிலளிக்க வேண்டும் அல்லது நடந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவுகிறது.

மூளையின் செயல்பாட்டை அன்றே ஞானத்தால் அறிந்தவர் அகத்தியர்.  முன் பகுதி மூளைக்கு செயல்பாடுகளை அறிந்து இச்செயலை செய்தார். உணர்ச்சி கட்டுப்பாட்டு, முடிவெடுக்கும் திறன்கள், பகுத்தறிவு, தொடர்புகொள்வதற்கும் திறன் போன்ற செயல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற பயிற்சி தான் இந்த 'கொட்டுதல்' . இதை அக்குபங்க்சர் என்பார்கள். நம் சித்தர்கள் அறிவியலாகவும் ஆன்மிகமாகவும் நமக்கு கற்றுக் கொடுத்தார்கள். விடாமுயற்சியாக செய்ய வேண்டும் என்றும், இன்றைய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இப்பதிவை எழுதியுள்ளேன்

சர்வமும் அவனுக்குள் அடக்கம்
நன்றி

Saturday, November 7, 2020

Did you know ?

Did you know?


Did you know?
Did you know?
 Did you know?



Did you know?
Did you know?
Did you know?
Did you know?
Did you know?
Did you know?

Monday, November 2, 2020

உன்னையே நீ அறிந்தால்

"தன்னை யறிந்தருளே தாரகமாய் நிற்பதுவே 
உன்னை யறிதற் குபாயம் பராபரமே"

என்று தாயுமானவர் கூறுவதுபோல் தன்னைத் தானே அறிவது என்பது எப்படி?

பருஉடலுக்குள் அதிநுட்பமாக இருக்கும் மனம், சித்தம், புத்தி இவைகளுக்கு மேம்பட்டதாக இருக்கும் அகங்காரம், இதயத்தின் நுட்பம், மூளையின் தன்மை போன்ற குணங்களை அறிந்து கொள்வதே தன்னை அறிவதாகும். மனம், சித்தம், புத்தி என்பவைகள் ஒன்றாகி, ஒன்றில் ஒன்றாக இருந்தாலும், புரிந்து கொள்ள வெவ்வேறாக அலசும்படியதாகின்றது. அத்துடன் அனைத்திற்கும் ஆதாரமாக, குணங்களற்ற ஒன்றாக இருக்கும் ஆன்மாவின் (உயிரின்) இயக்கத்தை அறியும்போது, தன்னை அறிவதோடு தலைவனை (பேரான்மாவை)யும் அறிந்து, பேரறிவைப் பெறும்படியாகிறது.

உடல், உடல் சம்பந்தப்பட்ட கரணங்கள் யாவும் பூமியான உலகத்தை சார்ந்ததாகவும், சீவன் என்பது சூக்கும உலகத்தை சார்ந்ததாகவும் இருக்கின்றது. நான், நீ, தான் என்பதெல்லாம் அகங்காரத்தின் அகம்பாவமே. உடல் இதயத்தின் வசமாகும்.

இதயம் அசைந்தாலே உடல் முழுமையும் அசைவுறும் இதயம் மலர்ந்தால் மகிழ்வும், இதயம் சுருங்கினால் கோபமும் உண்டாகின்றது. இருதயமான மாமிசத் துண்டினுள், நுண்ணிய அந்தரங்கத்தில் இருக்கும் நான் எனும் தன்மையையும், இயற்கை குணத்தையும் அறிவதே, கடவுளை அறிவதாகும்.
 
திருமூலர் கூறுகிறார்:

"தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படில் 
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற 
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே."

திருமந்திரம் 2055

சற்குரு திருமூலநாதரின் கூற்றுப்படி; தானே சிவம் என்று தன்னை உணர்ந்து கொண்ட உண்மையான குருநாதனின் சந்நிதி முன்பாக அமரும்போது, தானே தன்னை அறிந்துணரும் மனப் பக்குவம் கைகூடில், அவர் தன் ஆன்மாவையே சிவம் என்று உணரும் பெருமை பெற, உடம்பினுள் இருந்தே, தானே சிவம் என்ற அனுபவம் ஏற்பட்டு தெளிந்தறிய முடியும்.

பிரபுலிங்கலீலை கூறுகையில்:

"தன்னைச்சிவமென்றறிந்தவனேயறிந்தான்றன்னையுண்மையாத் 
தன்னைச் சிவமென் றறியாதா னறியானென்றுந் தன்னுண்மை 
தன்னைச் சிவமென் றறிந்தவன்றே தாழ்வாம் பாசந்தனை நீப்பான் 
தன்னைச் சிவமென் றறியாதான் றனக்குப் பிறப்பே துணையாகும்."

(படிக்க நன்றாக இருக்கு இல்லையா?)

திருநாவுக்கரசரும், 'விதியை மதியால் வெல்லலாம், ஊடே ஈசன் அருள் இருந்தால்...'' என்றார்

தன்னைத்தான் அறிவதாவது இறைவனை அறிவதாகும் இறைவனை தம்முள்ளே இருத்தியவர்களின் செயலால் வையகம் திர மகிழ்வுடனும், அமைதியுடனும் வாழ வழிவகை செய்யப்பட்டு, மனிதன் உடலையும், உடலை இயங்கச் செய்யும் உயிரின் மேன்மை களையும், மனதின் மாண்புகளையும் துல்லியமாக அறிந்து, மேம்பட்டு வாழும் கலையாக நிறைவாக வாழ்ந்து பிறவா நிலையை எய்த முடியும்.

உன்னையே நீ அறிந்தால். அது இறைவனை அறிந்ததாகும்..

Source: புத்தகம்- அகமுகநாதர் குருஜி - திருமூலரின் சமாதியோகம்.