Friday, March 4, 2022

கண்ணதாசன் சொன்ன உண்மைகள்


"ஒருவன் சராசரி மனிதனாயினும் சரி,  தலைமை வகிக்கும் மனிதனாயினும் சரி, ஒரு கட்டத்தில், உள்ளூர இறைவனை நம்பத் தொடங்குகிறான்"


"என் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு எதிரொலியிலும், நான் அடிக்கடி சொல்வது "நம் மூதாதையர்கள் முட்டாள்களல்ல"


"சகோதரன்" என்ற வார்த்தையே 'சக உதரன்'- ஒரே வயிற்றில் பிறந்தவன் என்பதைக் குறிக்கும்"


எங்கே பந்தம் ஏற்றத் தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கே தான் உறவிருக்கிறது"


"ஆசை எந்தக் கட்டத்தில் நின்று விடுகிறதோ அந்த கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது.

சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது"


குற்றங்களும், பாபங்களும் அற்றுப் போய்விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற் போய்விடுகின்றன. "


"அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டு பிடிக்க முடியாது.

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்."


இருப்பது போதும்;

வருவது வரட்டும்;

போவது போகட்டும்;

மிஞ்சுவது மிஞ்சட்டும்....

என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்"


"கஷ்டத்திலும் நேர்மையாக இரு நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய், தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது"


"பாவம் என்பது நீ செய்யும் தீமை

புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"

"அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்"

"விநாச காலே விபரீத புத்தி"

 

"நமது ஞானிகள்

              அறிவுலகத்தின் சுடரொளிகள்"


"காலங்களை நிர்ணயிக்கின்றவனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

ஆனாலும் ஒர் அன்னையோ உன் ஆத்மாவுக்கு உடம்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்".


அன்பன், 

கண்ணதாசன்.