Friday, September 23, 2022

அம்மாவின் பொய்கள்

 


அம்மாவின் எட்டு பொய்கள் 

நான் ஏழை சிறுபாலகன். எப்போதாவது சிறிது உணவு கிடைக்கும் போது என் தாயும் நானும் உணவு சாப்பிட, என் தாய், எனக்கு பசி இல்லை, நீயே சாப்பிடு என்று அவள் தட்டு உணவையும் எனக்கு இட்டு மகிழ்வாள். இது அவள் அடிக்கடி சொல்லும் முதல் பொய். அருகில் இருக்கும் ஆற்றில் ஒரு முறை, இரண்டு மீன் பிடித்து வந்து, சூப் வைத்து எனக்கு தந்து அருகில் அமர்ந்து ரசித்தாள். எனது தட்டில் மீதமிருந்ததை, அவள் உண்டாள். இது என் இதயத்தை தொட்டது. மற்றொரு முறை, நான் எனக்கு தந்த மீனில் ஒரு மீனை அவளுக்கு தந்த போது அவள் உடனே மறுத்து எனக்கு மீனே பிடிக்காது என்றாள். இது அவளது இரண்டாவது பொய். பிறகு, என் படிப்பிற்காக, அவள் தீப்பெட்டி தொழிற்சாலை சென்று திரும்பி வரும் போது, காலி தீப்பெட்டி, தீக்குச்சி கொண்டுவந்து இரவில் நெடு நேரம் உறங்காது, அதை அடுக்குவாள். நான் இடையில் விழித்து படு அம்மா மீதி நாளை பார்க்கலாம் என்பேன். அவள் எனக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை, நீ தூங்கு என்று மூன்றாவது பொய்யாக சொல்வாள். அவள் எனக்கு தந்த தேனீரில் பாதி குடித்துவிட்டு பாதி அவளுக்கு தர, நீயே குடி, எனக்கு தேவையில்லை என நான்காவது பொய்யாக சொல்லுவாள். என் அப்பா, திடீரென இறந்ததும் வறுமையிலிருந்ததால், சுற்றி உள்ளவர்கள், என் தாயை மறுமணம் செய்து கொள்ளும்படி சொல்ல, அப்படி ஓர் உறவு தேவையில்லை என ஐந்தாவது பொய்யாக கூறினாள்.

படிப்பை முடித்து எனக்கு வேலை கிடைத்ததும் அவளுக்கு அனுப்பிய பணத்தை திருப்பி எனக்கே அனுப்பி எனக்கு காய்கறி விற்பனையில் பணம் வருது என்று ஆறாவது பொய்யாக சொன்னாள். என்னோடு USA வரும்படி கூப்பிட நான் கிராமத்தில் மகிழ்சியாய் வாழ்கிறேன் என ஏழாவது பொய்யாக சொன்னாள். முடிவில் புற்று நோயால் அவதி பட்ட அம்மாவை ஆஸ்பத்திரியில் பார்க்க, அழாதே மகனே, வலிக்கவே இல்லை என எட்டாவது பொய்யாக கூறி என்னை சிந்திக்க வைத்தாள்.

Source: சக்கர ஆற்றல்கள், வே. அரங்கன், யோக சேவக தன் ஆர்வலர் குடும்பம், தருமபுரி