Saturday, November 21, 2020

குண்டலினியின் இருப்பிடம்

குண்டலினியின் இருப்பிடம்

எருவிடும் வாசற்கு இருவிரல் மேலே கருவிடும் வாசற்கு இருவிரல் கீழே உருவிடும் சோதியை உள்க வல்லார்க்கு கருவிடும் சோதி கலந்து நின்றானே.

மந்திரம். 584

மலம் கழிக்கும் வாயிலான குதத்திற்கு இரண்டு விரல் மேலே, கருவுண்டாகும் வாயிலாகிய யோனிக்கு இருவிரல் கீழுள்ள இடத்தில் ஒளிவடிவில் அமைந்துள்ள குண்டலினியை நினைக்க வல்லார்க்கு மூலப்பொருளாகிய சிவசக்தியை சோதி வடிவில் தரிசிக்கலாம்

இம்மந்திரம் மூலாதாரத்தின் இடத்தை சரியானபடி அளவிட்டுக் காட்டுகிறது. வர்மக்கலையில் மூலாதாரம் உள்ள இடம் மூல வர்மம் என்று கூறப்படும். மூலாதாரம் என்பது தண்டுவடத்தின் அடிப்பகுதியில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மூலாதாரச் சக்கரத்தை மூலபந்தம் அஸ்வினி முத்திரை மூலம் அறிந்து கொள்ளலாம்.

மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை (மந். 690) என்பதற்கிணங்க மூலாதாரத்திலிருக்கும் சிவ சக்தியாகிய ஓங்காரத்தை எழுப்பாமல் எந்தவொரு ஆன்மீக செயற்பாடும் பலனளிக்காது.



No comments:

Post a Comment