Sunday, October 25, 2020

ஓம்' என்ற சொல் ஏன் உச்சரிக்க வேண்டும்

                                 'ஓம்'

ஓம் என்பது பிரணவசொரூபம்.

எந்த நேரத்திலும் 'ஓம்' 'ஓம்' என்று உச்சரித்துக் கொண்டிருந்தால் மிகசிறப்பு. இதனால் எல்லாவித துன்பங்களும் விலகும். வரவிருக்கிற துன்பங்களும் நெருங்காது. மூலாதாரத்திலிருந்து மூளை வரை உள்ள எல்லா நரம்புகளையும் தொட்டு இயங்கச் செய்கிறது. இதை உச்சரிப்பதால் வினைகள், விதிகள் வராது. பத்மாசனத்தில் அமர்ந்து கூறினால் விதியும், வினைப்பயனும் பாதிக்காது.

நம் சித்தர்கள் கூறிய திருமந்திரத்தில் 'ஓம்' என்ற சிறப்புகளை காண்போம்.

திருமூலர் - மந்திரம் 944

"ஓமென்று எழுப்பித் தன் உத்தம நந்தியை நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந்தாரே"

பொருள்:

மூலாதாரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சத்தியை "ஓம்" எனும் பிரணவ யோகத்தால் எழுப்பி புருவமத்தியில் கொண்டு வந்து அந்த பிரணவ ஒளியை தரிசிக்க அறிந்தவர்கள் மாமன்றில் ஆடும் உத்தம நந்தியைக் கண்டு மகிழ்ந்திருப்பர். நெற்றிப்பிரதேசமே மாமன்று, சிற்றம்பலம் சிதாகாசம் எனப்படும். பிரணவ ஒளியைக் காண்பவர்க்கே இறைவன் திருவருள் கிடைக்கும் என்பது வலியுறுத்தப்படுகிறது

சிவபுராணத்தில் மாணிக்கவாசகர்
எழுத்திய பாடல் ஒன்றில்

மந்திரம் எண் 35

"மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள்
ஓங்கார மாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே. "

பொருள்: 

உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேறன்
நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியால் எழுந்த
உண்மைப் பொருளே!
காளையை ஓட்டி வருபவனே! வேதங்கள்
ஐயா! எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பல பல தன்மைகளைப் பெருகி
ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே!

"ஓம்" என்ற சொல் ஆழமாக உச்சரிப்பதால் பல பல தன்மைகளை வளரும். வினைகளை எல்லாம் மறையும். பல புது வழிகள் கிடைக்கும்.

தியானத்தில் சொல்லும் மிக சிறந்த மந்திரம் 'ஓம்'. 

Source: திருமூலர் திருமந்திரம் , சிவபுராணம்

2 comments: