திருமூலரின் திருமந்திரம் - 725
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண் டானென்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
பொருள்:
*நான் என்னுடைய உடம்பை இழிவாக எண்ணிக்கொண்டிருந்தேன். அதாவது குறையுடையது என்று எண்ணினார்.
*ஆனால் இந்த உடம்புக்குள்ளே சிறந்த பொருளான சிவத்தைக் கண்டேன்.
உடம்புக்குள்ளே உரிமையாளர் இல்லாமல் தானே வந்தடையும் பொருள் ஒன்று இருப்பதை கண்டார்.
*உடம்பை இறைவன் தன் கோயிலாகக் கொண்டுள்ளான் என்பதை அறிந்து உடம்பை பேணிக் காத்துக் கொண்டு இருக்கிறேன். அந்த பொருள் பரம்பொருளாகிய இறைவன் என்பதையும் அவன் இந்த உடம்புக்குள்ளே கோவில் கொண்டுள்ளான் என்பதை தெரிந்து கொண்டு இந்த உடம்பை யாம் பேணி பாதுகாத்து வருகின்றோம்.
இவ்வாறு உடம்புக்குள்ளே இறைவன் இருக்கிறார் என்பதை திருமூலர் இம்மந்திரத்தில் உடம்பின் பயனையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறுகிறார்.
நல்ல இயற்கை உணவுகள் உண்பது மிகவும் முக்கியமானது. இறைச்சி தவிர்க்க வேண்டும் என்று எல்லாம் சித்தர்கள், ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த kvn thirumoolar இணையதளம் திருமூலரின் திருமந்திரம் பாட்டாக உள்ளது.
Source: google research, kvn thirumoolar, பேரின்பம் உன்னுள்ளே
No comments:
Post a Comment