Wednesday, September 30, 2020

கொரோனா கவிதைகள்

* கவிதை *

கொரோனா னு சொண்ணாங்க

கொதிச்சு போய் நின்னோம்ங்க உலகத்தையே ஆட்டி படைச்சுது
உறவுகளை எட்ட வச்சது! 
மக்களை முடக்கி போட்டு மாஸ்க்கை மாட்டி விட்டது
முகமூடி கொள்ளையராகி வங்கியையே திகைக்க வைத்தோம்.
பொங்கி எழும் பெண்கள் எல்லாம் பொங்கி போட்டே பொறுமை இழந்தனர்
பார்த்து பார்த்து வளர்த்த ஆண்கள் பாத்திரம் தேய்க்க பழகி போனாங்க.
பிழைப்பிற்காக வந்த ஜனம் பிழைத்தால் போதும் என நடந்தே சென்றது
கட்டுப்படாமல் கலக்கிய காளையர் காக்கி சட்டையால் கலங்கி நின்றது
நல்ல மனிதர்களை பலரை இழந்து நல்ல நாளை வேண்டி நிற்கிறேன்

- ராஜி

* கவிதை *

இயற்கையின் சந்தோஷம்

அடங்கியது மக்கள் வீட்டுக்குள்...
வானிலை அசுவாசபட்டு ஆனந்தம் கொண்டது!!
மாசு இன்றி மழை பொழிந்து தள்ளியது! 
சுற்றுச் சுழல் சுத்தமாகி சந்தோசத்தால் சுதந்திரமாய் சுற்றின
பறவை இனங்கள் கங்கையே சுத்தமாகி கண்ணேதிரே கலங்கமில்லாமல் கட்டுக்கடங்காமல் செல்கிறது...
கட்ட பஞ்சாயத்திற்கு இடமில்லை என காட்டாற்று வெள்ளமாய் காவேரி அருவியென ஆந்திராவும் திறந்துவிட ஆர்பரித்து வருகிறது கிருஷ்ணா வழக்கத்தை விட ஆனந்தமாய் மழை வளம் பெறுகி குளிர்கிறது குழந்தை மனம்! 
வாகனத்தை குறைத்து வனத்தை வாழ வைத்து வாழும் காலம் கொரோனா தந்த பாடம் என பாடத்தை மனதில் பதிப்போம்!

-ராஜி

No comments:

Post a Comment