"ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகன் ஆகுதல்"
என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் இவ்வாறு செய்யப்படுகிறது.
வழக்கமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அந்தமான் கடல் பகுதியில் இருந்து புயல் உருவாகி, தமிழகம் நோக்கி வரும். அதேபோல அக்டோபர்-டிசம்பர் மாதங்களில், வங்காளக் கடலின் மேற்குப் பகுதியில் ஏற்படும் சலனத்தால் புயல் உருவாகி தமிழகம் நோக்கி வரும்
கடந்த ஆண்டுகளில், தானே புயல் டிசம்பர் மாதமும், அதேபோல வார்தா புயல் டிசம்பர் மாதமும், கஜா புயல் நவம்பர் மாதமும் தமிழகத்தைத் தாக்கியது நினைவுகூரத் தக்கது. இவ்வாறான புயலைத் தடுக்கும் வல்லமை தீபத்திற்கு உண்டு
கார்த்திகை தீபம், திருவண்ணாமலையில் மட்டும் அல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான வீடுகளிலும் ஏற்றப்படுகிறது இவற்றுடன் அனைத்துக் கோவில்களிலும் 'சொக்கப்பனை' என்ற பெயரில் தீபம் ஏற்றப் படுகிறது. இவ்வாறு ஏற்றப்படும் பெருவாரியான தீபங்களில் இருந்து கிளம்பி, வாயு மண்டலத் தில் அதிகமாகப் பரவும் கார்பன் வாயு, மழை மேகங்களைக் கலைத்து, பேரழிவு ஏற்படுத்தும் மழையைத் தடுக்கும் தன்மை கொண்டது புயலை அது பலவீனம் அடையச் செய்து விடும்.
(தீபத்தின் அறிவியல் பற்றி படிக்க இதை "விளக்கின் அறிவியல்" கிளிக் செய்யலாம் )
இதனால், கார்த்திகை தீபம், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதன் காரண மாகவே, திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவின்போது மீனவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது மலை மீது வைக்கப்படும் பிரமாண்ட கொப்பரை யில், 3 ஆயிரம் கிலோ நெய் ஊற்றி, அதில் ஏராளமான கற்பூரம் சேர்க்கப்பட்ட ஆயிரம் மீட்டர் நீள காடா துணியை திரியாக்கி தீபம் ஏற்றுவார்கள். இந்தக் கொப்பரையை மலை மீது கொண்டு செல்லும் பணியை, பர்வதராஜ குலத் தினர் என்ற மீனவர்கள் மட்டுமே செய்யப் பாத்தியப்பட்டவர்கள். அதேபோல தீபம் ஏற்று வதும் அந்த மீனவர்கள்தான். இதற்காக அந்த மீனவர்களில் உண்ணாமுலை பிரியன், பென்னாட்டு பிரியன், வதத்திப் பிரியன்' என்று மூன்று பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள் முறை வைத்துக் கொண்டு இந்தப் பணியைச் செய்கிறார்கள். புயலின் ஆக்ரோஷத்தைத் தடுத்து தங்களைக் காக்கும் என்பதால், தீபம் ஏற்றும் பணியை மீனவர்களே ஏற்று நடத்துகிறார்கள்
கார்த்திகை தீபம், மீனவர்களுக்கு மட்டும் அல்லாமல் விவசாயிகளுக்கும் உதவுகிறது. தை மாதம் அறுவடை ஆக இருக்கும் பயிர்களில் கார்த்திகை மாதம் பால் பிடிக்கும். அந்த சமயத் தில் சுழல் காற்று வீசினால், பால் பிடிப்பது தடுக்கப்பட்டு, அதனால் அறுவடை பாதிக்கப் படும். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் வீசும் சுழல் காற்றை சமன்படுத்தும் திறன், அக்னிக்கு உண்டு. கார்த்திகை தீப அக்னி, சுழல் காற்றை சமன்படுத்தி விவசாயிகளுக்கு உதவுகிறது மேலும் ஐப்பசி-கார்த்திகை மாதங்களில் வெட்டுக்கிளிகள் பெருகும். அவற்றையும் கார்த் திகை தீபம் மட்டுப்படுத்தும்
மழைக் கால நோய்க் கிருமிகளையும் கார்த் திகை தீபம் கட்டுப்படுத்தும். ஜோதியால் ஏற் படும் கதிர்கள், மனிதர்கள் உடலில் பட்டு அவர் களது ஆன்ம சக்தியை அதிகரிக்கும். இவை போன்ற அறிவியல் காரணங்களால்தான், ஐப்பசி மாதம் வீடுகளிலும், ஆலயங்களிலும் கார்த் திகை தீபம் ஏற்றப்படுகிறது. இறைவன் ஜோதி ரூபமாகக் காட்சி அளிக்கிறான் என்றும், அவனது அடியையும் முடியையும் காண பிரம்மா வும், திருமாலும் முயன்று தோற்றதாகவும் லிங்க புராணத்தின் 17-ம் அத்தியாயத்தில் கூறப்பட்டு இருக்கிறது. இதேபோல பல புராணக் கதைகள், கார்த்திகை தீபம் குறித்து சொல்லப்படுகின்றன
ஆன்மிகமாகவும், அறிவியலாகவும், கார்த்திகை தீபம் என்பது மக்களுக்குப் பயன் உள்ள விழா என்பதால், அனைவரும் கார்த்திகை தீபம் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
Source: thanthi
No comments:
Post a Comment