Saturday, October 3, 2020

நெஞ்சைத் தொட்ட கதை!

ஒரு நாள் கணவனும் மனைவியும் சமையல் அறையில் அமர்ந்து கொண்ட போது...

கணவன்: நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன். நாம் விவாகரத்து செய்வோம்!

எந்த பதற்றம் இல்லாமல் கூறினாள்

மனைவி: இந்த உரையாடலுக்காக நான் காத்திருக்கிறேன். நான் உங்களுக்கு விவாகரத்து தருகிறேன்.
ஆனால் இந்த நிலைமை நம் மகனுக்கு மன அழுத்தமாக இருக்கும். அதனால்தான் எனக்கு ஒரு நிபந்தனை உள்ளது.
ஒரு மாதம் காத்திருப்போம். நான் அவனை தயார் செய்கிறேன்.

கணவன்: சரி. ஆனால் நம் மகன் காரணமாக மட்டுமே. நான் உன்னை இனி காதலிக்கவில்லை என்பது உனக்குத் தெரியும்.

நாள் ஒன்று! நிபந்தனையின் படி மனைவியை துக்கிச் சென்றார்.

இதை பார்த்த மகன் சந்தோஷம் அடைந்தான்.

முன்றாவது நாளும் கணவன் மனைவியை துக்கிச் சென்றார்.

ஐந்தாவது நாளில் கணவன் மனைவியின் முகத்தைப் பார்த்தவுடன் அறியாத பாசம் அவன் மனதில் உருவாகியது.

முப்பதாவுது நாளில் கணவனும் மனைவியும் கண்ணாடி முன்னாடி நின்றார்கள். 

மனைவி: என் உடல் இடை குறைந்தது!

அடுத்த நாள் கணவன் வெளியே சென்று, தன் இரண்டாவது காதலிக்கு போன் செய்யது "நான் என் மனைவியை காதலிப்பதை உணர்ந்தேன். எனக்கு விவாகம் செய்ய விரும்ப்பம் இல்லை என்று கூறி போனை வைத்தார். 

வீட்டுக்கு திரும்பு முன் மலர்களை வாங்கி கொண்டான். அதில் அட்டையில் "வாழ் நாள் முழுவதும் உன்னை சுமைக்க பெருமைப்படுகிறேன்" என்று எழுதியுள்ளார்.

கணவன் வீட்டுக் கதவை திறக்க... மகன் பெட் ரூம்யில் இருந்து ஓடி வந்தான்.

மகன்: அப்பா!! அப்பா!!! அம்மா........

உடனடியாக கணவன் பதற்றத்தில் ஓடி போய் பார்த்தார்....

மனைவி இறந்து விட்டாள்...

கணவன் மனைவியின் கையில் இருந்த லட்டரை எடுத்துப் படித்தார், அதில்
" நீங்கள் கவனிக்கவில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் நான் கடந்த 6 மாதங்களாக புற்றுநோயின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். மன்னிக்கவும், என்னை உங்கள் கைகளில் சுமக்கச் செய்ததற்கு மன்னிக்கவும், ஆனால் அதற்கு நன்றி, நம் மகன் உங்களை கெட்டவனாக பார்க்க மாட்டான். நான் உங்களிடம் எதையும் குற்றம் சாட்டவில்லை. இந்த நாட்களில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். நீங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்"

கணவனின் மனம் உடைந்து போனது.

Source: Quora 

No comments:

Post a Comment