Monday, September 21, 2020

தியானம் செய்க

உண்மையான மகிழ்ச்சி, நீடித்த மகிழ்ச்சி, “யார் பெற்றிருப்பதனால் வேறு எந்தப் பேறும் பெரும் பேறில்லையோ" (பகவத் கீதை VI:22 பொழிப்புரை)அந்த இறைவனிடத்தில் மட்டுமே கிடைக்கிறது.

நம்முடைய அனைத்து அச்சங் களிலிருந்தும் ஒரே பாதுகாப்பு, ஒரே புகலிடம், ஒரே தப்பித்தல் அவனிடத்தில்தான் உள்ளது. உலகத்தில் உங்களுக்கு வேறு எந்தப் பாதுகாப்பும், வேறு எந்த விடுதலையும் கிடையாது. ஒரே நிஜமான சுதந்திரம் இறை வனிடத்தில் உள்ளது. எனவே காலை மற்றும் இரவு தியானத்திலும் மற்றும் நாள் முழுவதும் நீங்கள் ஆற்றும் அனைத்து வேலையிலும், கடமைகளிலும் அவனுடன் தொடர்பு கொள்ள ஆழ்ந்து முயற்சி செய்யுங்கள். 

எங்கே இறைவன் இருக்கிறானோ,  அங்கே அச்சமில்லை துக்கமில்லை என யோகம் போதிக்கின்றது. உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் உலகங்களின் பேரிரைச்சல்களுக்கு இடையே வெற்றிகரமான யோகி"யால்
நிலைகுலையாமல் நிற்க முடியும்; அவன், "இறைவா நான் எங்கிருக்கிறேனோ, அங்கே நீ வந்தாக வேண்டும்," என்ற ஞானத்தில் பாதுகாப்புடன் இருக்கிறேன்

Source: Book: ஒளி உள்ள இடத்தினில் வாழ்க்கையின் சவால்களைச் சந்திப்பதற்கான உள்நோக்கு மற்றும் உள்ளெழுச்சி. ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

No comments:

Post a Comment