Wednesday, August 26, 2020

நம் தினசரி சொல்லும் மந்திரத்தின் அர்த்தம்

ஆத்ம தரிசனம் என்ற புத்தகத்தில் சொல்ல பட்ட மந்திரத்தின் பலன்கள் இங்கு உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

மேலும் இந்த மந்திரமும் தியானமும் எப்படி செய்வது என்று இந்த புத்தகத்தில் உள்ளன. அதன்படி செய்ய வேண்டும். மேலும் அறிய இந்த 

Website link : Anadha Jothi பாருங்கள்.

"ஓம் நமசிவாய நம"

*இந்த மந்திரத்தை சொல்லும் போது பூத சுத்தி செய்வதற்கு அதாவது, நீ பஞ்சபூதங்களையும் தெளிவதற்காக. 
*நீ பஞ்சபூதங்களைத் தெளிந்து பெற்ற திறன், உன் இந்திரியங்களால் கிரகித்துக் கொள்ளப்படுகிறது.

"ஓம் பிரம்மா விஷ்ணு ருத்ர மஹேஸ்வராய நமஹ"

இந்த மந்திரத்தை சொல்லும் போது, நீ உன் இந்திரியங்களைத் தெளிந்து பெற்ற திறன் உன் உணர்ச்சிகளால் கிரஹித்துக் கொள்ளப்படுகிறது. 

"ஓம் ஹ ஹீ ஹு ஓ ஹோ நமஹ"

இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், உன்‌ உணர்ச்சிகள், உன் விருப்பு  பவித்திரமாகின்றன. உன் மனம், தொண்டை பகுதியைச் சேரும் போது நீ உணர்ச்சிகளைத் தெளிந்து பெற்ற திறன், எதையும் புரிந்து கொள்ளும் திறன் கிரஹித்துக் கொள்ளப்படுகிறது. 

"ஓம் ஹ்ரீம் ஸீம் க்லீம் ஸௌம் நமஹ."

இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், உன் மனம் நாக்கின் கடுப்பாகத்தைச் சேரும் போது, எதையும் புரிந்துந்கொள்ளும் உன் திறன் எது சரி, எது தவறு என்பதை அறியும் திறன் கிரஹித்துக் கொள்ளப்படுகிறது.

"ஓம் லம் வம் ரம் யம் ஹம் நமஹ.”

இந்த மந்திரம், எது சரி, எது தவறு என்று அறியும் உன் திறனைப்
பவித்திரமாக்குகிறது, திரிகுண சுத்தி ஏற்படுகிறது.

"ஓம் சிவாயவசி சிவாய நமஹ"

இந்த மந்திரம் உன் லட்சியத்தைப் பவித்திரமாக்குகிறது. உன் மனத்தை புருவ மத்திக்குக் கொண்டுவந்ததும் என்னுடைய 'லட்சியம், 'கவித்துவத்தால்' கிரஹித்துக்கொள்ளப்படுகிறது. 

"ஓம் சிவ சரணம்"

இந்த மந்திரம் பிந்துமய
சுத்திக்காகச் சொல்லப்படுகிறது. அதாவது, உன் கவித்துவம் பவித்திரமாகிறது. நெற்றியின் மையத்தைத் தன் ஸ்தானமாகக் கொண்டுள்ள 'நினைவாற்றல்' உன் கவித்திறனை' கிரஹித்துக்கொள்கிறது. 

"ஓம் சிவ சிவா போற்றி”

இந்த மந்திரத்தால் உன் ‘நினைவாற்றல்' பவித்திரமாகிறது. அதாவது, நாதமாய் சுத்தி,' ஏற்படுகிறது. உன் மூளையின் அடிப்பாகத்தைத் தன் ஸ்தானமாகக் கொண்டுள்ள விவேகம் தனக்கு முந்தைய ஸ்தானத்தில் நிலை கொண்டிருந்த நினைவாற்றலை' கிரஹித்துக்கொள்கிறது.

"ஓம் சிவ சிவ நமஸ்தே நமஸ்து."

இந்த மந்திரத்தைச் சொல்வதால் உன் விவேகம் பவித்திரமடைகிறது இதைத்தான் கலாமய சுத்தி' என்றழைக்கிறார்கள். மூளையின் நடுப்பகுதியைத் தன் ஸ்தானமாகக் கொண்ட புத்தி, தனக்கு முந்தைய ஸ்தானத்தைச் சேர்ந்த 'விவேகம் கிரஹித்துக்கொள்கிறது.

"ஓம் அஹம் ஏவ பிரம்மா சிவ சிவ சிவ ஐக்கிய அர்ப்பண நமஹ"

இந்த மந்திரம் உன் புத்தியைப் பவித்திரமாக்குகிறது. இதைத் துபரமய சுத்தி' என்று அழைக்கிறார்கள். உன் மூளையின் மேற்பகுதியைத் தன் ஸ்தானமாகக் கொண்டிருப்பது 'அறிவு' எனும் திறன். உன் மனம் இந்த ஸ்தானத்தை அடைந்ததும் உன் புத்தி' 'அறிவு' கிரஹித்துக் கொள்ளப்படுகிறது. 

“ஓம் சிவ சிவ சிவ சிவ சிவாய நமஹ சம்போ சிவோஹம் "

இந்த மந்திரத்தைச் சொல்வதால் பரமய சுத்தி ஏற்படுகிறது. அதாவது, உன் 'அறிவுத்திறன் பவித்திரமடைகிறது. கபாலத்தின் நடுப்பகுதியில் உன் 'மனத்தை இருக்கும் போது அதைத் தன் இருப்பிடமாகக் கொண்ட ஞானம் உன் 'அறிவுத்திறன்' கிரகித்துக்கொள்கிறது.

நன்றி
"சர்வமும் அவனுக்குள் அடக்கம்"












No comments:

Post a Comment